உலக கோப்பை கால்பந்து 2018: கோல்டன் பால், கோல்டன் பூட், கோல்டன் கிளவ் விருது வென்ற வீரர்கள்

உலக கோப்பை கால்பந்து 2018:  கோல்டன் பால், கோல்டன் பூட், கோல்டன் கிளவ் விருது வென்ற வீரர்கள்

மாஸ்கோ: பிபா உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு கோல்டன் பால், கோல்டன் பூட், கோல்டன் கிளவ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்கியது. பல முன்னணி அணிகளும், நட்சத்திர வீரர்களும் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் பிரான்ஸ் அணியும், யாரும் எதிர்பார்க்காத குரோஷியா அணியும் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறின. இதில் குரோஷியா அணியை பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 20 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை வென்றது.

இந்நிலையில், இந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி சிறப்பாக விளையாடிய வீரருக்கு வழங்கப்படும் தங்க பந்து விருது குரோஷியா அணியின் லூகா மோட்ரிச்சிற்கு வழங்கப்பட்டது. சிறந்த கோல் கீப்பருக்கு வழங்கப்படும் தங்க கிளவ் விருது பெல்ஜியம் அணி கோல் கீப்பர் திபவ்ட் கோர்டோய்ஸ்க்கு வழங்கப்பட்டது. அதே போல் அதிக கோல் அடித்த வீரருக்கு வழங்கப்படும் தங்க காலணி விருது இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனுக்கு வழங்கப்பட்டது. மேலும், சிறந்த இளம் வீரருக்கான விருதை பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே தட்டி சென்றார்.

பிபா உலகக் கோப்பை 2018 2018 உலகக் கோப்பை கால்பந்து உலகக் கோப்பை ரஷ்யா பிரான்ஸ் குரோஷியா தங்க பந்து கோல்டன் பால் தங்க கிளவ் கோல்டன் கிளவ் தங்க காலணி கோல்டன் பூட் லூகா மோட்ரிச் திபவ்ட் கோர்டோய்ஸ் ஹாரி கேன் எம்பாப்பே Fifa world cup 2018 2018 world cup football world cup Russia France croatia golden ball golden glove golden boot luka modric Thibaut Courtois Harry Kane
FIFA

Leave a comment

Comments