உலகக் கோப்பை கால்பந்து: குரோஷியாவில் குதூகலம்-வீடியோ

உலகக் கோப்பை கால்பந்து: குரோஷியாவில் குதூகலம்-வீடியோ

ஸாக்ரெப் (குரோஷியா): உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு முன்னர் குரோஷிய ரசிகர்கள் குதூகலமாக கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு ஐரோப்பிய அணிகளான முன்னாள் சாம்பியன் பிரான்சும், குரோஷியாவும் முன்னேறின. குட்டி அணியான குரோஷியா அணி முதன்முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. எளிமையின் அடையாளமாக விளங்கும் அந்நாட்டு அதிபர் கொலிண்டா கிராஃபர் கிரடோவிக்கும் முக்கியமான போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்கு வந்து தங்களது அணி வீரர்களை உற்சாகப்படுத்தியதுடன், அவர் நடனமாடிய வீடியோவும் வெளியாகி வைரலானது.

குட்டி நாடாக இருப்பினும், குரோஷியா நாடு மற்றும் அந்நாட்டு அணி வீரர்களின் உற்சாகம், தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டி வரை முன்னேறியது உள்ளிட்டவைகள் குரோஷியாவை பேசு பொருளாக மாற்றியது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி பட்டம் வென்று இருந்தது.முன்னதாக, இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்னர், குரோஷியா நாட்டு ரசிகர்கள் ஒன்றுகூடி குதூகலமாக கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FIFA world cup 2018: Pre match celebrations in Croatia

பிபா உலகக் கோப்பை 2018 2018 உலகக் கோப்பை கால்பந்து உலகக் கோப்பை ரஷ்யா பிரான்ஸ் குரோஷியா Fifa world cup 2018 2018 world cup football world cup Russia France
FIFA

Leave a comment

Comments