உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வெற்றி; அதிபர் உற்சாக கொண்டாட்டம்

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வெற்றி; அதிபர் உற்சாக கொண்டாட்டம்

மாஸ்கோ: உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து கேலரியில் அமர்ந்திருந்த அந்நாட்டின் அதிபர் எழுந்து நின்று உற்சாகமாக கொண்டாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

21-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கியது. லீக் ஆட்டங்கள், நாக் அவுட், காலிறுதி அறையிறுதி ஆட்டங்கள் முடிவுற்று நேற்றைய தினம் இறுதிப் போட்டி நடந்தது. இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இப்போட்டி ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் நேற்று நடந்தது.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இறுதிப் போட்டியை காண பிரான்ஸ் அதிபர் இமானுவேல், குரோஷியா அதிபர் கொலிண்டா உள்ளிட்டோர் ரஷ்யாவிற்கு வருகை புரிந்திருந்தனர். இவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், பிபா தலைவர் உள்ளிட்டவர்களுடன் வி.வி.ஐ.பி-க்களுக்கான கேலரியில் அமர்ந்து ஆட்டத்தை கண்டு களித்தனர்.

இந்நிலையில், இறுதி போட்டியின் ஆட்ட நேர முடிவில் 4-2 என்ற கோல்கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2018 உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டதை பிரான்ஸ் அணி தட்டிச் சென்றது. இதையடுத்து, கேலரியில் அமர்ந்திருந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் எழுந்து நின்று உற்சாகமாக கைகளை உயர்த்தி ஆரவாரம் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

French President Emmanuel Macron Cheers From The Stands

பிபா உலகக் கோப்பை 2018 2018 உலகக் கோப்பை கால்பந்து உலகக் கோப்பை ரஷ்யா பிரான்ஸ் குரோஷியா Fifa world cup 2018 2018 world cup football world cup Russia France Croatia
FIFA

Leave a comment

Comments