மாபெரும் 2018 பிபா உலகக் கோப்பை சாம்பியன் பட்டதை வென்றது பிரான்ஸ்!

மாபெரும் 2018 பிபா உலகக் கோப்பை சாம்பியன் பட்டதை வென்றது பிரான்ஸ்!

மாஸ்கோ: 2018 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 2018 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் விளையாடின. ஆட்டம் தொடங்கிய 18-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி முதல் கோலை அடித்தது. அதைத் தொடர்ந்து 28-வது நிமிடத்தில் குரோஷியா கோல் அடித்தது. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையை எட்டியது. இந்நிலையில், ஆட்டத்தின் 39, 59 மற்றும் 65-வது நிமிடங்களில் பிரான்ஸ் அணி வரிசையாக கோல்களை விளாசி கிட்டதட்ட வெற்றியை உறுதி செய்தது. அதேசமயம் விடாமல் போராடிய குரோஷியா அணி அதிர்ஷ்டவசமாக 69-வது நிமிடத்தில் தனது 2-வது கோலை அடித்தது.

அதன் பிறகு ஆட்டநேர இறுதிவரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல்கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2018 உலகக் கோப்பை சாம்பியன் பட்டதை வென்றது. அந்த அணி 20 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது. பிரான்ஸ் அணிக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடிய குரோஷியா அணி முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்த பெருமையை மட்டும் தக்க வைத்துக் கொண்டது. அந்த அணியால் சாம்பியன் பட்டதை தனதாக்க முடியவில்லை.

2018 fifa world cup final france team champion france vs Croatia world cup football 2018 உலகக் கோப்பை இறுதிப் போட்டி பிரான்ஸ் அணி சாம்பியன் பிரான்ஸ் குரோஷியா
FIFA

Leave a comment

Comments