2018 பிபா உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் யார்? பிரான்ஸ் - குரோஷியா இன்று பலப்பரீட்சை!

2018 பிபா உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் யார்? பிரான்ஸ் - குரோஷியா இன்று பலப்பரீட்சை!

மாஸ்கோ: 2018 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இன்று பிரான்ஸ் – குரேஷியா அணிகள் மோதுகின்றன.

கடந்த மாதம் 14-ஆம் தேதி ரஷ்யாவில் தொடங்கிய 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் வெல்லும் அணி சாம்பியன் பட்டதை வென்று சரித்திரம் படைக்கும் என்பதால் உலகம் முழுக்க இருக்கும் கால்பந்து ரசிகர்கள் இப்போட்டியை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இதற்கு முன்பு கடந்த 1998-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை பிரான்ஸ் அணி வென்றிருந்தது. இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் அந்த அணி களமிறங்குகிறது. இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.

அதேசமயம் நடப்பு உலக கோப்பை தொடரில் குரோஷிய அணியும் பலமான அணிகளை புரட்டியெடுத்து விட்டு தான் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. லீக் சுற்றில் அர்ஜென்டினாவுக்கும், அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துக்கும் அந்த அணி அதிர்ச்சி வைத்தியம் அளித்ததை மறக்க முடியாது.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை சோனி இ.எஸ்.பி.என், சோனி டென்2, டென்3 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

2018 Fifa World Cup france vs Croatia world cup football world cup final 2018 உலகக் கோப்பை பிரான்ஸ் vs குரேஷியா உலகக் கோப்பை கால்பந்து
FIFA

Leave a comment

Comments