பிபா உலக கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி பெல்ஜியம் 3-வது இடம்

பிபா உலக கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி பெல்ஜியம் 3-வது இடம்

மாஸ்கோ: பிபா உலக கோப்பையில் இங்கிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி 3-வது இடம் பிடித்தது.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த உலக கோப்பை கால்பந்து திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி, அர்ஜெண்டினா, பிரேசில், போர்ச்சுகல் போன்ற அணிகள் முறையே லீக், நாக்-அவுட், காலிறுதி சுற்றுகளில் தோல்வியடைந்து வெளியேறின. இதனையடுத்து அரையிறுதிக்கு பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய அணிகள் முன்னேறின.

அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸிடம் பெல்ஜியமும், குரோஷியாவிடம் இங்கிலாந்தும் தோல்வி அடைந்தன. இதனைத் தொடர்ந்து பிபா உலக கோப்பையில் 3-வது இடத்திற்காக இங்கிலாந்தும், பெல்ஜியமும் நேற்று மோதின.தொடக்கம் முதலே பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே பெல்ஜியத்தின் மியூனியர் முதல் கோல் அடித்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதற்கு பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காததால் முதல் பாதியின் முடிவில் 1-0 என்ற கணக்கில் பெல்ஜியம் முன்னிலை பெற்றது. 

இரண்டாவது பகுதியில் கோல் அடிக்க இங்கிலாந்து அணி கடுமையாக முயற்சித்தது. ஆனால், பெல்ஜியம் அணியின் தடுப்பாட்ட வீரர்களை மீறி இங்கிலாந்தால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ஹசார்டு 2-வது கோல் அடித்து இங்கிலாந்துக்கு அடுத்த அதிர்ச்சி அளித்தார். இறுதியாக 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 2018 பிபா உலகக்கோப்பை கால்பந்தில் பெல்ஜியம் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது.

பிபா உலகக் கோப்பை 2018 2018 உலகக் கோப்பை கால்பந்து உலகக் கோப்பை ரஷ்யா இங்கிலாந்து குரோஷியா பெல்ஜியம் பிரான்ஸ் Fifa world cup 2018 2018 world cup football world cup Russia England Croatia Belgium
FIFA

Leave a comment

Comments