உலகக் கோப்பை கால்பந்து 2018: 3-வது இடம் யாருக்கு? இங்கிலாந்து-பெல்ஜியம் இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து 2018: 3-வது இடம் யாருக்கு? இங்கிலாந்து-பெல்ஜியம் இன்று மோதல்

மாஸ்கோ: உலகக் கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது இடம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டியில் இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் இன்று மோதவுள்ளன.

உலகக் கோப்பை கால்பந்து லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி, அரையிறுதி ஆட்டங்கள் முடிவுற்று இறுதிப் போட்டி ஜூலை 15-ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. இதில், பிரான்ஸ்-குரோஷியா அணிகள் மோதவுள்ளன. ஏற்கனவே சாம்பியனான பிரான்ஸ் அணியும், முதன்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கும் குட்டி நாடான குரோஷியா அணியும் மோதவுள்ள இந்த போட்டி ராசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் - பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின. இந்த போட்டிகளில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் அணியும், 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை தட்டிச் செல்வதுடன் முதலிடத்தையும், தோற்கும் அணி இரண்டாவது இடத்தையும் பிடிக்கும்.

இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது இடம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில், அரையிறுதிப் போட்டியில் கடுமையாக போராடி தோல்வியடைந்த இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ளது. அதிக கோல் அடித்த வீரருக்கான தங்கக் காலணி விருது பெற இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Foot Ball World Cup 2018: third place playoff, Belgium v England

பிபா உலகக் கோப்பை 2018 2018 உலகக் கோப்பை கால்பந்து உலகக் கோப்பை ரஷ்யா இங்கிலாந்து குரோஷியா பெல்ஜியம் பிரான்ஸ் Fifa world cup 2018 2018 world cup football world cup Russia England Croatia Belgium
FIFA

Leave a comment

Comments