உலக கோப்பை கால்பந்து போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது குரோஷியா

உலக கோப்பை கால்பந்து போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது குரோஷியா

மாஸ்கோ: உலக கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு குரோஷியா முன்னேறியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கின. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின. அதில், 1-0 என்ற கோல் கணக்கில் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் கிரெய்ன் டிரிப்யேர் முதல் கோல் அடித்து அந்த அணியை முன்னிலை பெற செய்தார். இதையடுத்து, குரோஷியா அணி கோல் அடிக்காததால் முதல் பாடி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமன் ஆனது. பின்னர் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் இரண்டாவது பாதி ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. ஆட்டம் சமனில் முடிந்ததால் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. இதிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, மேலும் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் குரேஷியா வீரர் மாரியோ 1 கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ள குரோஷியா அணி, வருகிற 15-ம் தேதி நடைபெற்றவுள்ள இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

FIFA worlcup Football 2018: Croatia beat England and enters into Final

பிபா உலகக் கோப்பை 2018 2018 உலகக் கோப்பை கால்பந்து உலகக் கோப்பை ரஷ்யா இங்கிலாந்து குரோஷியா Fifa world cup 2018 2018 world cup football world cup Russia England
FIFA

Leave a comment

Comments