வெற்றி கொண்டாட்டம்; குரோஷியா பெண் அதிபர் நடனமாடி மகிழ்ச்சி-வீடியோ

வெற்றி கொண்டாட்டம்; குரோஷியா பெண் அதிபர் நடனமாடி மகிழ்ச்சி-வீடியோ

மாஸ்கோ: உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் குரோஷியா அணி நுழைந்ததை அந்நாட்டு பெண் அதிபர் நடனமாடி கொண்டாடினார்.

உலகக் கோப்பை கால்பந்து லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கின. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின. அதில், 1-0 என்ற கோல் கணக்கில் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து, நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின. அதில், 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ள குரோஷியா அணி, வருகிற 15-ம் தேதி நடைபெற்றவுள்ள இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இங்கிலாந்து-குரோஷியா இடையேயான அரையிறுதிப் போட்டியை காண வந்திருந்த குரோஷிய அதிபர் கொலிண்டா கிராஃபர் கிரடோவிக், வி.வி.ஐ.பி கேலரியில் ரஷ்ய பிரதமர் டிமித்ரி மேட்வடேவ் உடன் அமர்ந்து போட்டியை ரசித்து வந்தார். இந்நிலையில், தங்கள் அணி வெற்றி பெற்றதும் ரஷ்ய பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி-க்களின் முன்னிலையிலேயே தான் ஒரு அதிபர் என்றும் யோசிக்காமல் சாமானியராக எழுந்து நின்று உற்சாகமாக நடனமாடினார்.


இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தங்களுடைய நாட்டு அணியின் வெற்றியை ஒரு ரசிகையாக அவர் கொண்டாடியது அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

நாட்டுக்கே அதிபரானாலும் கொலிண்டா எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர். மக்கள் பணத்தில் உல்லாசச் சுற்றுப்பயணங்கள் மற்றும் வி.ஐ.பி கலாசாரத்தை முற்றிலும் விரும்பாதவர் என கூறப்படுகிறது.


முன்னதாக, குரோஷியா அணி ரஷ்யா அணியுடன் மோதிய காலிறுதி ஆட்டத்தை காண வந்த அதிபர் கொலிண்டா, சாமானிய மக்களுடன் சமானியாக விமானத்தில் எக்கனாமி க்ளாஸ்' இருக்கையில் அமர்ந்துதான் ரஷ்யாவுக்கு பயணித்தார். மேலும் அந்த ஆட்டத்தில் குரோஷியா வெற்றி பெற்றதும், வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று, அவர்களை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்ததுடன், அவர்களுடன் இணைந்து நடனமும் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FIFA worldcup football 2018: Croatian President Kolinda Grabar Kitarovic dances after ther team won match against England

குரோஷியா அதிபர் கொலிண்டா கிராஃபர் கிரடோவிக் குரோஷியா அதிபர் நடனம் பிபா உலகக் கோப்பை 2018 2018 உலகக் கோப்பை கால்பந்து உலகக் கோப்பை ரஷ்யா இங்கிலாந்து குரோஷியா Fifa world cup 2018 2018 world cup football world cup Russia England Croatia Croatian President Kolinda Grabar Kitarovic
FIFA

Leave a comment

Comments