உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதி: பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது பிரான்ஸ்

உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதி: பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது பிரான்ஸ்

மாஸ்கோ: உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது பிரான்ஸ் அணி.

உலகக் கோப்பை கால்பந்து லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின.

கால் இறுதியில் 2 முறை சாம்பியனான உருகுவே அணியை வீழ்த்திய பிரான்ஸ் அணியும், கால்இறுதியில் 5 முறை சாம்பியனான பிரேசிலை வீழ்த்திய பெல்ஜியம் அணியும் அரையிறுதியில் மோதிய ஆட்டம் மிகவும் எதிர்பார்ப்புடன் தொடங்கியது. இறுதி போட்டிக்கு நுழைய போவது யார் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து மைதானத்தில் திரண்டிருந்தனர்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், இரு அணி வீரர்களும் எந்த கோலும் அடிக்காததால் முதல் பாதி 0-0 என சமனில் முடிந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இறுதியாக 1-0 என்ற கோல் கணக்கில் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

FIFA world cup football 2018: France beat Belgium in semifinal and enters into final

பிபா உலகக் கோப்பை 2018 2018 உலகக் கோப்பை கால்பந்து உலகக் கோப்பை ரஷ்யா பெல்ஜியம் பிரான்ஸ் Fifa world cup 2018 2018 world cup football world cup Russia Belgium
FIFA

Leave a comment

Comments